அட்டாங்க யோகம்

bookmark

549.
(1). உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
(2). பிரச்சதம் எட்டும் பேசியே நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே. 1
(1). உரைத்த நவாக்கிரி
(2). பிரைச்சதம்
550.
செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசக்தி உத்தர பூருவ
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே. 2
551.
அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்
புன்னெறி (1). யாகத்திற் போக்கில்லை யாகுமே. 3
(1). யாக்கத்திற்
552.
இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்(1).பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே. 4
(1). நண்பிரத்தி