கொக்கு பாரு கரையிலே

கொக்கு பாரு கரையிலே

bookmark

கொக்கு பாரு கரையிலே 
காத்திருக்கு  வெயிலிலே 
எதுக்கிருக்கு கரையிலே 
மீனுக்காது  புரியலே  

 


நீரை விட்டு வெளியிலே 
மீனும் துள்ளி வரையிலே 
கொத்திக்கிச்சா லபக்குனு 
மீன் கொக்கு வாயிலே 

 


மக்கு மீனு கொக்குடன் 
மல்லு கட்ட  முடியல 
ஏமாளி மீனுதான் 
இரையாகிப்  போனதாம் 

 


காத்திருந்து கடமையை 
கச்சிதமா முடிக்கணும் 
நேரம் பார்த்து கொக்குபோல 
நெனச்சத நாம் முடிக்கனும்