செல்வம், வேலை கிடைக்க - ஸ்ரீ லட்சுமி மந்திரம்

bookmark

ஸ்ரீ லட்சுமி தாயார் கடாட்சம் பெற்று செல்வம் வளரவும், வேலை கிடைக்கவும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் 10 முறை செபிக்கவும். ஸ்ரீ லட்சுமி தாயார் கடாட்சம் பெற்று செல்வம் வளரவும், வேலை கிடைக்கவும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் 10 முறை செபிக்கவும். வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி லட்சுமி பூஜை செய்து 108 முறை செபித்து வர விரைவில் வேலை கிடைக்கும்.
 
"ஸ்ரீ தேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா
விஷ்ணுபத்னீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ
ஹரிப்ரியா தேவதேவீ மஹாலட்சுமீச சுந்தரி"

 

செல்வ கடாட்சம் கிடைக்க - ஸ்ரீ மகாலட்சுமி ஸ்தோத்திரம் 
தினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து,கீழ்க்காணும் லட்சுமி ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள். மேலும், தங்களது சக்திக்கு உகந்தவாறு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். இதனால், ரோகங்கள், மனத் துயரங்கள், சஞ்சலங்கள் ஆகிய யாவையும் நீங்கி புது நம்பிக்கைப் பிறக்கும். தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும்; நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.
 
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
ஸங்கசக்ரகதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூடே கோலாஸுரபயங்கரீ
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வக்ஞே ஸர்வவரதே ஸர்வதுஷ்டபயங்கரீ
ஸர்வ து:க்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸித்திபுத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ரமூர்த்தே ஸ்தாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யந்த்ரஹிதே தேவி ஆத்யஸக்தி மஹேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மகா லக்ஷ்மி நமோஸ்துதே
 
கருத்து:
மகாமாயையும் ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும் சங்கம், சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவளுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம்.

 

காலையில் சொல்ல வேண்டிய - ஸ்ரீ மகாலட்சுமி லட்சுமி ஸ்லோகம் 
காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் றெக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்!
 
ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங்கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். 
 
கராக்ரே வஸதே லக்ஷ்மீ
கரமத்யே ஸரஸ்வதீ கரமூலேது
கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்
 
நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி!