திருக்கானப்பேர்

bookmark

பாடல் 1332
தனத்தானத்தா தனதன தனதன ...... தனதான
தனத்தானத்தா தனதன தனதன ...... தனதான
அனத்தோடொப்பா மெனுநடை மடவியர் ...... அநுராகம்
அதற்கேசிச்சீ இனமென துயிர்கெடல் ...... அழகாமோ
உனைப்பாடிப்பே றுறுமொரு வரமினி ...... உதவாயோ
உவப்பாகத்தே வர்கள்சிறை விடவிடும் ...... அயிலோனே
முனைப்பாடிக்கே திரிதரும் அரிதிரு ...... மருகோனே
முகிற்கே நத்தா விரிதரு கலபநன் ...... மயிலோனே
தினைக்காவற்கே உரியவள் மனமகிழ் ...... மணவாளா
திருக்கானப்பேர் நகர்தனி லினிதுறை ...... பெருமாளே.
பாடல் 1333 
தானத்தானத் ...... தனதானா
தானத்தானத் ...... தனதானா

கோலக்காதிற் ...... குழையாலே
கோதிச்சேர்மைக் ...... குழலாலே
ஞாலத்தாரைத் ...... துயரேசெய்
நாரிக்காசைப் ...... படலாமோ
மேலைத்தேவர்க் ...... கரியோனே
வீரச்சேவற் ...... கொடியோனே
காலப்பாசத் ...... துயர்தீராய்
கானப்பேரிற் ...... பெருமாளே.