விஜயமங்கலம்

பாடல் 936
தனன தந்தனத் தானான தானன
தனன தந்தனத் தானான தானன
தனன தந்தனத் தானான தானன ...... தனதான
கலக சம்ப்ரமத் தாலேவி லோசன
மலர்சி வந்திடப் பூணார மானவை
கழல வண்டெனச் சாரீரம் வாய்விட...... அபிராமக்
கனத னங்களிற் கோமாள மாகியெ
பலந கம்படச் சீரோடு பேதக
கரண முஞ்செய்துட் பாலூறு தேனித...... ழமுதூறல்
செலுவி மென்பணைத் தோளோடு தோள்பொர
நிலைகு லைந்திளைத் தேராகு மாருயிர்
செருகு முந்தியிற் போய்வீழு மாலுட ...... னநுராகந்
தெரிகு மண்டையிட் டாராத சேர்வையி
லுருகி மங்கையர்க் காளாகி யேவல்செய்
திடினு நின்கழற் சீர்பாத நானினி ...... மறவேனே
உலக கண்டமிட் டாகாச மேல்விரி
சலதி கண்டிடச் சேராய மாமவ
ருடன்ம டிந்திடக் கோபாலர் சேரியில் ...... மகவாயும்
உணர்சி றந்தசக் ராதார நாரணன்
மருக மந்திரக் காபாலி யாகிய
உரக கங்கணப் பூதேசர் பாலக ...... வயலூரா
விலைத ருங்கொலைப் போர்வேடர் கோவென
இனையு மங்குறப் பாவாய்வி யாகுலம்
விடுவி டென்றுகைக் கூர்வேலை யேவிய ...... இளையோனே
விறல்சு ரும்புநற் க்ரீதேசி பாடிய
விரைசெய் பங்கயப் பூவோடை மேவிய
விஜய மங்கலத் தேவாதி தேவர்கள் ...... பெருமாளே.