அத்தை மகன் முத்துச்சாமி

முத்துச்சாமி, முத்தம்மாளின் முறைமாப்பிள்ளை.கேலி செய்யும் போக்கில் அவள் தலையில் சூடியிருந்த பிச்சிச்சரத்தை அறுத்தெறிந்தான். மலர் சூடுவதற்கு பதில் மலரைச் சிதைப்பது அமங்கலமென அவள் எண்ணினாள். பொய்க்கோபமுகங்காட்டி அவனைக் கடிந்து கொள்கிறாள். `என்னை விரும்பாத உன்னை விட்டு வேறொரு இளஞனைத் தேடிச் செல்லுகிறேன்,என்று கூறி அவனுக்குப் பொறாமையூட்ட முயலுகிறாள். அவன் முன்னைய இன்ப நிகழ்ச்சிகளை நினைவூட்டி அவளைச் சமாதானப்படுத்த முயலுகிறான். முடிவு நமது ஊகத்துக்கு விடப்பட்டுள்ளது.
முத்தம்மாள்: கொத்த மல்லித் தோட்டத்திலே
குளிக்கப் போயி நிக்கையிலே
அத்தை மகன் முத்துசாமி
அத்தெரிந்தான் பிச்சிச்சரம்
முத்துச்சாமி: சத்திரத்துக் கம்மாயிலே
மொச்சி நெத்-தெடுக்கையிலே
குத்துக் கல்லு மேலிருந்து-நான்
கூப்பிட்டது கேக்கலியோ?
கூடைமேலே கூடை வச்சு
குமரிப் புள்ளே எங்க போற
முத்தம்மாள்: ஏழுமலை கழிச்சு-ஒரு
எள வட்டத்தைத் தேடிப்போறேன்
முத்துச்சாமி பாக்குத் துவக்குதடி
பழய உறவு மங்குதடி
ஏலம் கசக்குதடி
என்னை விட்டுப் போறதுக்கோ?
வட்டார வழக்கு : நிக்கையிலே - நிற்கையிலே; மொச்சி- மொச்சை; அத்து - அறுத்து.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி.
--------------