
பாட்டு வேணுமா பாப்பா

பாட்டு வேணுமா பாப்பா பட்டு வேணுமா
என்ன பாட்டு உனக்கு வேணும் என்கிட்ட நீயு ம் கேளு
கேட்கும் பாட்டை நான் சொல்லித் தருவேன் கவனமாக நீ கேளு
பாரதியார் பாடி வச்ச பாட்டு வேணுமா
நம்ம நாட்டுப்பற்றைத் தூண்டும் நல்ல பாட்டு வேணுமா
நம்ம நாட்டுப் புறப் பாட்டு அது உணக்கு வேணுமா
நாடி நரம்பைத் தொட்டுவரும் பாட்டு வேணுமா
நம்ம நாட்டுப் புறப் பாட்டு அது உனக்கு வேணுமா
பாட்டு வேணுமா பாப்பா பட்டு வேணுமா