முள்ளங்கி

முள்ளங்கி

bookmark

முள்ளங்கி

மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மற்றும் பித்தப்பையினை சரி செய்யும்.

நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மூலநோய், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.

இதை சேர்த்துக்கொள்வதால் சிறுநீர் நன்கு வெளியேறும். இதனால் சிறுநீர் பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும்.

உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது.

இதன் சாறு மூல நோயை குணப்படுத்தும். இதை நன்றாக வேகவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் முழுவதுமாக கரையும்.

ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சீராக வைக்கும்.

தொண்டை வலி, நாவறட்சி போன்ற பிரச்னைகளைத் தீர்க்க வல்லது.

இதில் உள்ள கந்தக சத்து பித்தநீரை நன்றாகச் சுரக்கச் செய்யும். கல்லீரல் பிரச்னைகள் இருந்தால் அதுவும் குணமாகும்.

வாத நோய், வயிற்றெரிச்சல், உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும்.

வெண்குஷ்டம் உடலின் பிறபகுதிகளுக்கு பரவுவதை கட்டு படுத்துகிறது.

இதை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் தூய்மையடையும், சுவாச பிரச்சனைகளும் நீங்கும்.

இதை ஜூஸ் போட்டு குடிப்பது நமது உடலில் இருக்கும் பூச்சி கடி விஷம் முறியும்.

இதன் சாறு எடுத்து இளம் சூட்டில் காலையில் குடித்து வர நல்ல குரல் வளம் கிடைக்கும். பேச்சு தெளிவாக வரும். 

கோடை காலத்தில் இதை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் கோடை காலத்தில் ஏற்படும் உடல் வெப்பத்தை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தரும்.