ஆசை

ஆசை

bookmark

ஆசைக்கு அளவில்லை.

(அ) விரைவாகப் படியேறுபவர் திடீரென வீழ்வர் (ஆ) அவசர முன்னேற்றம் அடித்திடும் பல்டி.

(அ)உச்சியில் என்றும் ஓர் இடம் உண்டு (ஆ) ஆர்வ முயற்சியால் அடையலாம் உச்சியை.

ஆசைப்படுபவர் விடாது முயல்வர்.

ஏற்றம் உயர உயர இறக்கம் அதிகம் அதிகம்.

பேராசை இழந்திடும் பெரும்பாலோரை.

(அ)முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் (ஆ) தேடுவார் காண்பர் தேடாதார் காணார்.

பேராசைக்கு இல்லை இரக்க குணம்.

அடிவாரத்தில் தங்கிவிடுபவன் மலையைக் கடக்கமாட்டான் தேங்குபவன் முன்னேறான்.

பெரிய கடலில்தான் பெருமீன் இருக்கும் அதில் மூச்சடக்கத் தெரியாமல் முத்தெடுக்க முயலாதே.

பேராசை பெருநட்டம்.